எட்டு ஆண்டுகள் சிறை! மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கை!! சங்கரய்யாவை போற்றுவோம்!!!

சங்கரய்யாவை போற்றுவோம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
 
sangaraiya

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி நம் தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் உள்ளார் மேலும் சட்டமன்ற தேர்தலில் அவர் பல்வேறு கூட்டணியுடன் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூட்டணியில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் காணப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தற்போது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினராக உள்ள சங்கரய்யாவுக்கு தற்போது நூறு வயது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த படி அவருக்கு தற்போது பல்வேறு இயக்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் அதன் வரிசையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை போற்றும் விதமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சங்கர் ஐயாவை போற்றுவோம் எனவும் கூறியுள்ளார். எட்டு ஆண்டுகள் சிறைவாசம் மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கை என எண்ணங்களை இன்முகத்துடன் எதிர்கொண்டவர் அவர் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தியாகத்தின் அடையாளமாக விளங்கும் சங்கரய்யா திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொதுவுடைமை இயக்க கொள்கையில் உறுதி மிக்க சங்கரய்யா ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சொத்தாக திகழ்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார் மேலும் வாழும் வரலாறாக நூறாவது பிறந்த நாள் காணும் சங்கரையா மேலும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார் மதிப்பிற்குரிய தோழர்களின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் முறையில் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துக்களை அவருக்கு வழங்கி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

From around the web