நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம்: ரூ.2க்கும் குறைவாக விற்பனையாகும் முட்டைகள்

நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேங்கியிருக்கும் காரணத்தால் இன்று முட்டை விலை ரூ.2க்கும் குறைவாக அதாவது ரூ.1.95க்கு விற்பனையாகிறது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூ.1.95 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பீதியால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளதாகவும் முட்டை வியாபாரிகள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் முட்டை விலை குறைந்தாலும் ஓட்டல்களில் இன்னும் ஆம்லேட் விலை ரூ.10ல் இருந்து ரூ.25 வரை விற்பனையாகிறது என்பது
 
நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம்: ரூ.2க்கும் குறைவாக விற்பனையாகும் முட்டைகள்

நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேங்கியிருக்கும் காரணத்தால் இன்று முட்டை விலை ரூ.2க்கும் குறைவாக அதாவது ரூ.1.95க்கு விற்பனையாகிறது.

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூ.1.95 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பீதியால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளதாகவும் முட்டை வியாபாரிகள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் முட்டை விலை குறைந்தாலும் ஓட்டல்களில் இன்னும் ஆம்லேட் விலை ரூ.10ல் இருந்து ரூ.25 வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web