11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டதோடு பத்தாம் வகுப்பில் காலாண்டு மட்டும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவிகிதமும், வருகை பதிவேட்டில் இருந்தும் 20 சதவிகிதமும் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு பிரச்சனை முடிவடைந்த நிலையில் ஒரு சில தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை
 
11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டதோடு பத்தாம் வகுப்பில் காலாண்டு மட்டும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவிகிதமும், வருகை பதிவேட்டில் இருந்தும் 20 சதவிகிதமும் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு பிரச்சனை முடிவடைந்த நிலையில் ஒரு சில தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

புதிய பாடம் தொகுப்புக்கு உரிய அனுமதி பெறாமல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

அதையும் மீறி 11ஆம் வகுப்பு சேர்க்கையை ஒரு சில தனியார் பள்ளிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web