இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்ல ஆணை: பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும் இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் இலவச பாடப்
 

இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்ல ஆணை: பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும்

இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பாடப்புத்தகங்களை உரிய முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. ஜூன் இறுதிக்குள் இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதால் ஜூலை அல்லது ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பது கிட்டத்தட்ட உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web