பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு: பரபரப்பில் ஊழியர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற தகவல் அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என்றும் வரும் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் புத்தகங்களின் உதவியால் தொலைக்காட்சியில் பாடங்களை மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றும்
 

பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு: பரபரப்பில் ஊழியர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற தகவல் அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என்றும் வரும் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் புத்தகங்களின் உதவியால் தொலைக்காட்சியில் பாடங்களை மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து கல்வி அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் தினசரி பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது

பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் ஏராளமான கோப்புகள் தேங்கிக் கிடப்பதாகவும், தேங்கி கிடக்கும் இந்த கோப்புகளின் பணிகளை முடிக்கும் வகையில் தினசரி 50 சதவீத ஊழியர்கள் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

இதுகுறித்து அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுழற்சி முறையில் பணியாற்றுவது தொடர்ந்தாலும் 50 சதவீத ஊழியர்கள் தினசரி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

From around the web