பிளஸ் 1 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படுவது எப்போது? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சமீபத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு விடைத் தாள்கள் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: +1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்
 

பிளஸ் 1 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படுவது எப்போது? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சமீபத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு விடைத் தாள்கள் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: +1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆக.31 முதல் செப்.2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web