கொரோனா பாதிப்பு எதிரொலி: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து தற்போது வரை அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மனித இனம் திணறிக் கொண்டிருக்கிறது
இந்த நிலையில் பிரிட்டனில் புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக பிரிட்டனில் புதிய வகை வைரஸ் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது என்பதும், தற்போதைய வைரசை காட்டிலும் இந்த வைரஸ் 70 சதவீதம் அதிக வேகத்தில் பரவி வருவதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார்
இதனை அடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை கனத்த இதயத்துடன் ரத்து செய்வதாக கூறிய அவர் வைரஸ் தடுப்பு மருந்துகள் செயல் திறன் கொண்டவையாக இருப்பதாகவும் தெரிவித்தார். புதிதாக பரவிவரும் வைரஸ் உயிர் கொல்லியாகும் அளவுக்கு மோசமானதாக இல்லை என்றாலும் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்