நாளுக்கு நாள் குறையும் கொரோனா ஊரடங்கின் எதிரொலியா?மக்கள் நிம்மதி!

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது!
 
நாளுக்கு நாள் குறையும் கொரோனா ஊரடங்கின் எதிரொலியா?மக்கள் நிம்மதி!

தற்போது நாட்டில் கொரோனா பல பகுதிகளில் வேகமாக வீசப்படுகிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மாநிலம் மக்கள் மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் இந்த கொரோனா பாதிப்பானது இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் குறைந்துள்ளன. அதுவும் குறிப்பாக மகாராஷ்டிரா டெல்லி ஆந்திரா போன்ற மாநிலங்களில் முந்தைய அளவை காட்டிலும் தற்போது கணிசமாக இந்த கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.lockdown

தமிழகம் கேரளா புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இந்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் கொரோனாநோய்த் தொற்றானது அதிகமாக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மக்களுக்கு ஓரளவு ஆறுதலான தகவல் ,அதன்படி இந்தியாவில் சில தினங்களாக இந்த கொரோனா குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில்  ஒரே நாளில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் 3.43 லட்சமாக இருந்தது இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் 3.26 லட்சமாக இருந்தது. இந்நிலையில் இன்று 3.11 லட்சமாக குறைந்தது மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.மேலும் இந்தக் கொரோனா பாதிப்பானது ஆரம்ப காலத்திலேயே ஊரடங்கு போட்ட மாநிலங்களில் தற்போது குறைந்து காணப்படுவது தெரிய வந்துள்ளது.

From around the web