ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி: கூகுளில் இந்தியர்கள் என்ன தேடுகிறார்கள் தெரியுமா?

 
ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி: கூகுளில் இந்தியர்கள் என்ன தேடுகிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடே தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பதும் அது மட்டுமின்றி ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மத்திய அரசை நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளன நிலையில் விரைவில் மத்திய அரசு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

google

இந்த நிலையில் ஒரு பக்கம் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் சிலிண்டர் குறித்து நெட்டிசன்கள் கூகுளில் தேடி வருகின்றனர். கூகுள் தேடுபொறியில் அதிகமான இந்தியர்கள் ஆக்சிஜன் குறித்தும் ஆக்சிஜன் சிலிண்டர் குறித்தும் தேடி வருவதாகவும் தெரிகிறது.

இந்தியாவில் ஆக்சிஜன் எங்கு உற்பத்தி ஆகிறது? எங்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது? ஆக்ஸிஜன் சிலிண்டரின் பயன்கள் என்ன? என்பது குறித்து அதிகமாக கூகுள் தேடுபொறியில் இந்தியர்கள் தேடி வருவதாக கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web