நடிகர் பிரசன்னாவுக்கு மின்சார வாரியம் கண்டனம்!

நடிகர் பிரசன்னா நேற்று தனது டுவிட்டரில் தனது வீட்டில் மின் கட்டணம் ரூபாய் 70 ஆயிரம் வந்திருப்பதாகவும் இந்த ஊரடங்கு நேரத்தில் மின் வாரியம் கொள்ளை அடிப்பதாக யார் யார் உணர்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார் பிரசன்னாவின் இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மின் வாரியம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் விளக்கம் அளித்திருப்பதாவது: மார்ச் மாதத்திற்கான மின்கட்டணம் ரூபாய் 13,528ஐ நடிகர் பிரசன்னா செலுத்தவில்லை என்றும் மின் வாரியத்தை நடிகர் பிரசன்னா
 
நடிகர் பிரசன்னாவுக்கு மின்சார வாரியம் கண்டனம்!

நடிகர் பிரசன்னா நேற்று தனது டுவிட்டரில் தனது வீட்டில் மின் கட்டணம் ரூபாய் 70 ஆயிரம் வந்திருப்பதாகவும் இந்த ஊரடங்கு நேரத்தில் மின் வாரியம் கொள்ளை அடிப்பதாக யார் யார் உணர்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்

பிரசன்னாவின் இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மின் வாரியம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் விளக்கம் அளித்திருப்பதாவது:

மார்ச் மாதத்திற்கான மின்கட்டணம் ரூபாய் 13,528ஐ நடிகர் பிரசன்னா செலுத்தவில்லை என்றும் மின் வாரியத்தை நடிகர் பிரசன்னா கடும் சொற்களால் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது

மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் நான்கு மாத மின் நுகர்வை இரண்டாக பிரித்து மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் ஊரடங்கு காரணமாக பிரசன்னா வீட்டில் மின் நுகர்வை கணக்கிட முடியவில்லை என்றும் மின்வாரியம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web