சீர்காழியில் பயங்கர சத்தத்தோடு  நில அதிர்வு!மக்கள் அச்சம்!

மயிலாடுதுறையில் உள்ள சீர்காழி பூம்புகார் போன்ற பகுதிகளில் பயங்கர சத்தத்தோடு நில அதிர்வு!
 
சீர்காழியில் பயங்கர சத்தத்தோடு நில அதிர்வு!மக்கள் அச்சம்!

ஆரம்ப காலத்தில் பூமி யானது மிகவும் வழங்குவதாக காணப்பட்டது. மேலும் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் வளங்கள் செழித்துகாணப்பட்டது.மேலும் அறிவியல் வளர வளர பூமியின் இயற்கைச் சூழல்  மிகவும் மாறுபட்டு வருகிறது. மேலும் பூமியின் வட தென் துருவங்களில் பணிகள் அதிகமாக உருகி கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இது மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம்போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது இயற்கை  மட்டுமின்றி மனிதனின் செய்கையினால் ஏற்பட்டு வருகிறது.

earthquake

. இதில் உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவு ஏற்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் மயிலாடுதுறையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக  தகவல் வெளியாகிறது. மேலும் மயிலாடுதுறையில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் ,கொள்ளிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பயங்கர வெடி சத்தத்தோடு நில  அதிர்வு காரைக்கால் பகுதியிலும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். மேலும் விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றது அதற்குப்பிறகு நில  அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் அச்சம் கலந்த சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இது மட்டுமின்றி பல பகுதிகளிலும் நிலநடுக்கம், நில அதிர்வு போன்றவை ஏற்படுவது இதற்கு இயற்கை மட்டுமே காரணமில்லாது மனிதர்களும் மிக முக்கியமான காரணம் தான்.

From around the web