அண்டை மாநிலங்களுக்கு அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கம்

 
bus

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது என்பதும் இந்த ஊரடங்கில் திரையரங்குகள் திறப்பது, பள்ளிகள் திறப்பது மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்குவது ஆகியவை அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் இன்று முதல் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் அதிகாலை முதலே பேருந்துகள் ஓடத் துவங்கி உள்ளன. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கேரளாவில் கொடோன்ச்ச் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அம்மாநிலத்திற்கு மட்டும் இன்னும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கப்பட்டதை அடுத்து பெங்களுர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதும் இதில் பேருந்துகள் கூட்டமும் அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து சென்னை உள்பட தமிழகத்திற்கு வரும் பேருந்துகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web