முன்னதாக 65 கம்பெனி துணை ராணுவம்! தற்போது 235 கூடுதலாக கம்பெனி துணை ராணுவம்! 

மொத்தம் 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகத்தில் தேர்தல் பணியில் இருக்கும் என தேர்தல் தலைமை அதிகாரி கூறினார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் கலந்துள்ளன. தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது .தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே கொண்டுசெல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தையும், நகையையும் பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் தலைமை அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு.

saagu

அவர் இன்று தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் நிர்வாகிகளுடன் காணொளி புரிந்தார். தற்போது அவர் கூறினார், தமிழகத்தில் ஏற்கனவே 65 கம்பெனி துணை ராணுவம் உள்ளது எனவும் கூறினார். மேலும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக மேலும் தமிழகத்திற்கு 235 கம்பெனி துணை ராணுவம் கூடுதலாக வர இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் மொத்தம் 300 கம்பெனி துணை ராணுவம் தேர்தல் சமயத்தில் தமிழகத்தில்பணிபுரிவார்கள் என அவர் கூறினார். தேர்தல் பறக்கும் படையினர் உடன்  சோதனைச்சாவடிகளில் இணைந்து பணி புரிவார்கள் எனவும் அவர் கூறினார்.மேலும் இவர்கள் கண்காணிப்பு குழுவினரும் சோதனைச்சாவடியில்  பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு  கூறினார்.

From around the web