EA மால் முன் குவிந்த கூட்டம்: இயல்பு வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கிவிட்ட மக்கள்!

கடந்த 5 மாதங்களாக இருந்த ஊரடங்கு இன்று முதல் பெரும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டன, பூங்காக்கள் கோவில்கள் திறக்கப்பட்டுவிடடன என்பதால் கிட்டத்தட்ட பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது இந்த நிலையில் இன்று முதல் மால்கள் திறக்கப்படும் என்றும் அதற்குரிய சில நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான மால்களில் பொதுமக்கள் செல்வதற்கு வரிசையில் நின்ற காட்சிகளை பார்க்க
 

EA மால் முன் குவிந்த கூட்டம்: இயல்பு வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கிவிட்ட மக்கள்!

கடந்த 5 மாதங்களாக இருந்த ஊரடங்கு இன்று முதல் பெரும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டன, பூங்காக்கள் கோவில்கள் திறக்கப்பட்டுவிடடன என்பதால் கிட்டத்தட்ட பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது

இந்த நிலையில் இன்று முதல் மால்கள் திறக்கப்படும் என்றும் அதற்குரிய சில நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான மால்களில் பொதுமக்கள் செல்வதற்கு வரிசையில் நின்ற காட்சிகளை பார்க்க முடிந்தது.

குறிப்பாக சென்னையின் முக்கிய இடத்தில் இருக்கும் EA மால் முன் பொதுமக்கள் குவிந்தனர். உள்ளே செல்வதற்கு முன் வெப்பநிலை பரிசோதனையை செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இருப்பினும் வரிசையில் நின்ற பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றது அதிர்ச்சியைத் தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வை சரியாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த தளர்வுகளை தேவையில்லாமல் பயன்படுத்தி ஆபத்தை விலைக்கு வாங்கி கொள்ள வேண்டாமென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

From around the web