இ-பாஸ் கட்டாயம்: ரயில்வேத்துறை அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி

நாளை முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டாலும் பல்வேறு தளர்வுகளை பொதுமக்களுக்கு அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக ஒரு மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு மட்டுமே இ-பாஸ் வேண்டும் என்றும் தமிழக அரசு இன்று காலை அறிவித்து இருந்தது ஆனால் தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் கண்டிப்பாக இ-பாஸ் தேவை என்று தெரிவித்துள்ளது.
 
இ-பாஸ் கட்டாயம்: ரயில்வேத்துறை அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி

நாளை முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டாலும் பல்வேறு தளர்வுகளை பொதுமக்களுக்கு அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக ஒரு மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு மட்டுமே இ-பாஸ் வேண்டும் என்றும் தமிழக அரசு இன்று காலை அறிவித்து இருந்தது

ஆனால் தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் கண்டிப்பாக இ-பாஸ் தேவை என்று தெரிவித்துள்ளது. ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு அல்லது மாவட்டத்திற்கு அல்லது மாநிலத்திற்கு ரயில்கள் மூலம் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இதனால் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பம் செய்தாலும் இ-பாஸ் எளிதில் கிடைப்பதில்லை என்றும், இ-பாஸ் கிடைப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும், படிப்பறிவு இல்லாதவர்கள் இ-பாஸ் பெறும் நிலையில் இல்லை என்றும், எனவே ரயில் பயணிகளுக்கு இ-பாஸ் தேவை என்பதை நீக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

From around the web