இரு கட்சியினரும் அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள்-பிரச்சாரத்தில் டிடிவி தினகரன்

அவரக்குறிச்சி அமமுக வேட்பாளரை ஆதரித்து கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிரச்சாரம்!
 
இரு கட்சியினரும் அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள்-பிரச்சாரத்தில் டிடிவி தினகரன்

சட்டமன்ற தேர்தலில் பல கட்சி பல கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது.ஆளுங்கட்சியினர்  பாஜக பாமக   கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது.மேலும் எதிர்க் கட்சியான திமுக கட்சி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிக கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக உடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

ttv

இதற்காக தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறினார் இரண்டு கட்சிகளும் அரசு கஜானாவை கொள்ளையடிப்பது ருசி கண்டவர்கள் எனவும் கூறினார். மேலும் பஸ் விட்டு பஸ் மாறுவது போல் கட்சி மாறும்  கரூர் திமுக வேட்பாளர் எனவும் அவர் விமர்சித்தார். மேலும் அதிமுக, திமுக வாக்குறுதியை நம்பாதீர்கள் எனவும் டிடிவி தினகரன் கூறினார். தண்ணீரே இல்லை வாஷிங் மெஷின் எங்கு கொடுப்பார்கள் என முன் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web