ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000!!

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளது. இதையடுத்து மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவினை இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 103 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்தனர். மோட்டார் வாகன சட்டத் திருத்தம் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால்
 

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளது. இதையடுத்து மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவினை இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார். 

 
மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 103 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்தனர். மோட்டார் வாகன சட்டத் திருத்தம் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000!!1. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு – ரூ.500) 

2. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு – ரூ.100) 

3. சீட்பெல்ட் அணியாமல் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு – ரூ.100) 
 
4. அதிக வேகத்துடன் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு – ரூ.400) 

5.  செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு – ரூ.1000) 

6. மிக மிக வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு – ரூ.1000) 

7. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.10,000(முன்பு – ரூ.2000) 

8. ஆம்புலன்ஸுக்கு வழிவிடா விட்டால் அபராதம் ரூ.10,000. இதற்கு முன்பு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. 

From around the web