காலாவதியான ஓட்டுனர் உரிமம் செல்லுமா? மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நான்கு மாதங்களிலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை என்பதால் புதுப்பிக்க வேண்டிய பல ஆவணங்கள் புதுப்பிக்காமல் உள்ளன குறிப்பாக ஓட்டுனர் உரிமம், தகுதி சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை காலாவதி ஆகி உள்ளவர்கள் அவற்றை புதுப்பிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பு
 

காலாவதியான ஓட்டுனர் உரிமம் செல்லுமா? மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நான்கு மாதங்களிலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை என்பதால் புதுப்பிக்க வேண்டிய பல ஆவணங்கள் புதுப்பிக்காமல் உள்ளன

குறிப்பாக ஓட்டுனர் உரிமம், தகுதி சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை காலாவதி ஆகி உள்ளவர்கள் அவற்றை புதுப்பிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இது குறித்து சற்று முன் வெளியிட்ட அறிக்கையில் ’ஓட்டுநர் உரிமம், தகுதிச் சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடுவதாக அறிவித்துள்ளது. எனவே ஏற்கனவே காலாவதியாகி இருந்தாலும் அவை டிசம்பர் மாதம் வரை செல்லும். இதனால் வாகன ஓட்டுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

கடந்த சில மாதங்களாக வாகன ஓட்டுனர் உரிமை உட்பட காலாவதியான சான்றுகளால் பலர் திண்டாட்டத்தில் இருந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web