ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்; காரணம் சுற்றுலாத்தலங்கள் மூடல்!

சுற்றுலாத்தலங்கள் மூடல் காரணமாக படகு ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 
ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்; காரணம் சுற்றுலாத்தலங்கள் மூடல்!

தமிழகத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்த கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய அதன் பின்னர் தமிழகத்திலும் கொரோனா வந்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது.தமிழகத்தின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் சில தினங்களுக்கு முன்பாக விதிக்கப்பட்டன.

ooty

ஆயினும் தமிழக அரசின் சார்பில் நேற்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்து இருந்த அந்த கட்டுப்பாட்டு விதிகளில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கெதிராக சுற்றுலா தளத்தில் உள்ளவர்கள் குரல் கொடுத்தனர். உதகையில் சுற்றுலா தளத்தில் வேலை பார்க்கும் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.மேலும் அவர்கள் ஊரடங்கின்  சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதற்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தப் போராட்டமானது உதகை படகு இல்லத்தில்  நடைபெற்றதாக கூறப்படுகிறது மேலும் படகு ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டது காரணமாக வருவாய் இழந்ததாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் பின்னர் அதிகாரிகள் தாங்கள் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பின்னர்நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து படகு ஓட்டுனர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

From around the web