ஊரடங்கின்போது இலவச உணவு பெறவந்த பிச்சைக்காரப் பெண்ணை திருமணம் செய்த ட்ரைவர்!!

கொரோனா பாதிப்பு தீவிரமானதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொருநாளும் உணவின்றித் தவித்து வந்தனர். இவர்களுக்கு சினிமாப் பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழில்துறை நிறுவனர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைப் பொருளாகவோ, பணமாகவோ செய்து வந்தனர். அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் அனில் என்னும் டிரைவர் தன் முதலாளி இலவசமாகக் கொடுக்கும் உணவுகளை ஒவ்வொரு
 
ஊரடங்கின்போது இலவச உணவு பெறவந்த பிச்சைக்காரப் பெண்ணை திருமணம் செய்த ட்ரைவர்!!

கொரோனா பாதிப்பு தீவிரமானதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொருநாளும் உணவின்றித் தவித்து வந்தனர். இவர்களுக்கு சினிமாப் பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழில்துறை நிறுவனர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைப் பொருளாகவோ, பணமாகவோ செய்து வந்தனர்.

அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் அனில் என்னும் டிரைவர் தன் முதலாளி இலவசமாகக் கொடுக்கும் உணவுகளை ஒவ்வொரு ஏரியாவாகச் சென்று வழங்கி வந்துள்ளார்.

ஊரடங்கின்போது இலவச உணவு பெறவந்த பிச்சைக்காரப் பெண்ணை திருமணம் செய்த ட்ரைவர்!!

அப்போது ஒரு பகுதியில் தினமும் ஒரு பெண் தனது தாயுடன் வந்து உணவு பொட்டலங்கள் வாங்கிச் செல்கையில், அவரிடம் ஏன் பிச்சை எடுக்கிறீர்கள் என்பது குறித்துக் காரணம் கேட்டுள்ளார்.

தந்தை இல்லாத அந்தப் பெண்ணையும், அவரது தாயையும் சகோதரன் வீட்டைவிட்டு துரத்தியதாகவும், எவ்வளவோ வேலை தேடியும் யாரும் வேலை கொடுக்காததால் இந்தமுடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் டிரைவர் அனில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும் முதலாளியிடம் இதுகுறித்துப் பேசியதுடன் சம்மதமும் பெற்றுள்ளார்.  அதன்பின்னர் அனில் மற்றும் நீலம் இவர்களுக்கு இவரது முதலாளி தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்தார்.

இந்த வீடியோ வலைதளங்களில் பரவியதுடன், பொதுமக்கள் பலரும் முதலாளி லலித்தையும், ட்ரைவர் அனிலையும் பாராட்டியுள்ளனர்.

From around the web