வாடகை காரை பிரியாணி கடையாக மாற்றிய டிரைவர்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன என்பது தெரிந்ததே இதனால் வேலையின்றி வருமானம் இன்றி நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்இந்த நிலையில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது காரை பிரியாணி கடையாக மாறிய சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது மதுரையைச் சேர்ந்த மாஹின் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வாடகை கார் ஓட்டி வந்தார். ஊரடங்கு காரணமாக அவருக்கு சுத்தமாக வருமானம் இல்லாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது
 

வாடகை காரை பிரியாணி கடையாக மாற்றிய டிரைவர்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன என்பது தெரிந்ததே இதனால் வேலையின்றி வருமானம் இன்றி நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்
இந்த நிலையில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது காரை பிரியாணி கடையாக மாறிய சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

மதுரையைச் சேர்ந்த மாஹின் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வாடகை கார் ஓட்டி வந்தார். ஊரடங்கு காரணமாக அவருக்கு சுத்தமாக வருமானம் இல்லாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து சமீபத்தில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டாலும் வாடிக்கையாளர்கள் யாருமே வரவில்லை என்பதால் தனக்கு சுத்தமாக வருமானம் இல்லை என்று புலம்பியுள்ளார்

இதனை அடுத்து தனது வாடகை காரை பிரியாணி கடையை மாற்ற ஆரம்பித்தார். தனது வீட்டிலேயே சிக்கன் பிரியாணி செய்து அதை பொட்டலங்களாக கட்டி குறைந்த விலையில் வாடகை காரிலேயே வைத்து விற்பனை செய்து வருகிறார்

சுவை அதிகம், விலை குறைவு என்பதால் அதனை மக்கள் வாங்கிச் சென்று சாப்பிட்டு வருகின்றனர். இந்த வியாபாரத்தில் ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாக ஓட்டுநர் மாஹின் கூறியுள்ளார்

From around the web