பெட்ரோல் விலையை 20 ரூபாய் குறைக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசலின் விலை பெரிதாகக் குறையவில்லை, இது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக 20 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் கடந்த 1991ஆம் ஆண்டில் விற்பனையான விலையில்தான் கச்சா எண்ணெய் தற்போது விற்பனை ஆகிறது. எனவே அந்த ஆண்டில் பெட்ரோல் என்ன விலை விற்பனை ஆனதோ
 
பெட்ரோல் விலையை 20 ரூபாய் குறைக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசலின் விலை பெரிதாகக் குறையவில்லை, இது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக 20 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

கடந்த 1991ஆம் ஆண்டில் விற்பனையான விலையில்தான் கச்சா எண்ணெய் தற்போது விற்பனை ஆகிறது. எனவே அந்த ஆண்டில் பெட்ரோல் என்ன விலை விற்பனை ஆனதோ அதே விலைதான் தற்போது விற்பனையாக வேண்டும் ஆனால் கடுமையாக உயர்த்தப்பட்ட வரிகள் காரணமாக தற்போது பெட்ரோல் விலை இன்னும் குறையாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையையும் சமையல் கேஸ் விலையையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அனைத்து அரசியல் தலைவர்களிடம் இருந்தும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web