வரதட்சணைக் கொடுமை: மாமியார்மீது தீ வைத்த மருமகள்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பலம் கிராமத்தில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த மாமியாரை மருமகள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். 55 வயது நிரம்பிய ராஜம்மாளுக்கு 2 மகள்களும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். ரமேஷ்- பிரதீபா ஜோடிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மகப்பேறுக்காக தனது பிறந்துவீட்டுக்குச் சென்று இருந்த பிரதீபா 2 மாதங்களுக்கு முன்னர் கணவரின் வீட்டிற்கு கணவனால் அழைத்து வரப்பட்டுள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே,
 
வரதட்சணைக் கொடுமை: மாமியார்மீது தீ வைத்த மருமகள்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பலம் கிராமத்தில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த மாமியாரை மருமகள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். 55 வயது நிரம்பிய ராஜம்மாளுக்கு 2 மகள்களும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர்.

ரமேஷ்- பிரதீபா ஜோடிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மகப்பேறுக்காக தனது பிறந்துவீட்டுக்குச் சென்று இருந்த பிரதீபா 2 மாதங்களுக்கு முன்னர் கணவரின் வீட்டிற்கு கணவனால் அழைத்து வரப்பட்டுள்ளார்.

திருமணம் ஆனதில் இருந்தே, அவரது மாமியார் நகை, பாத்திரங்கள் எதுவும் சரிவரக் கொடுக்கவில்லை என்று கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். குழந்தை பிறந்தபின்னரும் வரதட்சணைக் கொடுமைகள் தொடர்ந்துள்ளன.

வரதட்சணைக் கொடுமை: மாமியார்மீது தீ வைத்த மருமகள்!!

மேலும் கணவனுடால் வாழ விடக்கூடாது என எண்ணித் திட்டம் தீட்டி செயல்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்துவந்த பிரதீபா ஜூன் 3 ஆம் தேதி மதியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார் ராஜம்மாள்மீது மண்ணெண்ணெ ஊற்றி தீ வைத்துள்ளார்.

அவரது சத்தம் கேட்டு, அண்டை வீட்டினர் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்துள்ளார்.

இதனால் பிரதீபாவை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் குழந்தை தந்தையான ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

From around the web