டவ் தே புயல் எதிரொலி! மூன்று மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

டவ் தே புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
டவ் தே புயல் எதிரொலி! மூன்று மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

தற்போது தமிழகத்தில் கோடை காலம்  ஆயினும் பல பகுதிகளில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது .மேலும் சென்னை மாநில ஆய்வு மையமானது கடந்த சில நாட்களாக அரபிக் கடலில் புயல் உருவாகும் என்றும் கூறியுள்ளது. மேலும் டவ் தே என்று பெயர் வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்து அரபிக்கடலின் மத்திய கிழக்கில் நிலை கொண்டது. மேலும் இந்த டவ் தே  புயல் வலுவடைந்து கோவா அருகே வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.rain

இந்த புயலில் எதிரொலியாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் நீலகிரி தேனி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்கள்,  தென் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

வட மாவட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மே 18, 19, 20 ஆகிய தேதிகளில் நீலகிரியில் கன மழையும் கோவை தேனி கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்காசி திருநெல்வேலி கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரி திருப்பத்தூர் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்.மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web