மதுரையில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம்;காரணம் "2000 ரூபாய்"

மதுரையில் நியாயவிலைக் கடையில் வழங்கப்படுகின்ற 2000 ரூபாய் காண டோக்கன் வினியோகிக்கும் பணி தொடங்கியது
 
2000

தற்போது நம் தமிழகத்தில் பல நிவாரணப் பொருட்களும் நிவாரண உதவிகளும் வழங்கப்படுகின்றன. காரணம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் அவர் மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதற்காக நியாயவிலை கடைகளில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகிறார். காரணம் என்னவெனில் தமிழகத்தில் சில நாட்களாக ஊரடங்கு உள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படலாம். இதனால் மக்களுக்கு கடந்த மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.ration

மேலும் இந்த 2000 ரூபாய் ஆனது இந்த மாதமும் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அவை ஜூன் 15ஆம் தேதிக்கு பின்னர் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பல மாவட்டங்களில் இந்த 2000 ரூபாய் காண பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகின்ற மதுரை மாநகரில் இன்று முதல் 2000 ரூபாய் காண டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. மேலும் இதில் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குகின்றனர். மேலும் அந்த குறிப்பிட்ட நாளில் வந்து நிவாரண நிதியாக 2000 ரூபாயை வாங்கி கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

மேலும்14 வகையான அத்தியாவசிய பொருட்களும் வழங் கப்பட உள்ளன. மேலும் மதுரையில் மொத்தம் 1379 நியாயவிலைக் கடைகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த நியாயவிலை கடைகளில் அந்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் தவறாமல் வந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

From around the web