"ஒரு கவலையும் வேண்டாம் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது"- அமைச்சர் சேகர்பாபு;

சென்னை மாநகராட்சி சார்பில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுகிறார்!
 
"ஒரு கவலையும் வேண்டாம் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது"- அமைச்சர் சேகர்பாபு;

தற்போது நம் இந்தியத் திருநாட்டில் கொரோனா நோயின் தாக்கம் இரண்டாவது அலையாக எழுந்துள்ளது. இதனால் நாடே மிகவும் அச்சத்தில் காணப்படுகிறது. நம் நாட்டிற்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டுகின்றன. மத்திய அரசின் சார்பில்  இரண்டு விதமான கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எனினும் பல மாநிலங்களில் இந்த கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது.covid 19

மத்திய அரசின் சார்பில் இந்த தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் கொரோனா  நோயாளிகள் பயன்படுவர் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திமுக. மேலும் திமுக சார்பில் முதல்வருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களது பணியினை ஆட்சியின் ஆரம்ப முதலே மிகவும் திறம்பட சிறப்பாக செய்து வருகின்றனர்.

 அமைச்சர் சேகர்பாபு தற்போது மக்களுக்கு இதமான செய்தி ஒன்றினை கூறியுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு வட்டத்திற்கு 50 முதல் 60 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் மாநகராட்சி சேர்ந்து திமுகவும் களப்பணியில் ஈடுபட்டு வருவதாக திமுக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி விலை உயர்வு இத்தகைய சூழ்நிலையிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web