சமூக இடைவெளி’ என்ற வார்த்தை வேண்டாம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி பேச்சு

 

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஐந்து மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் இந்திய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாக சமூக இடைவெளி என்பது மாறி விட்டது 

ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே குறைந்தது மூன்று அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அனைத்து மக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முதல் மாநில சுகாதார அமைச்சகங்கள் வரை அறிவுறுத்தி வருகின்றன

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் சமூக இடைவெளி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோன காலத்தில் சமூக இடைவெளி என்ற வார்த்தைக்கு பதிலாக தனிமனித இடைவெளி என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

சமூக இடைவெளி என்ற வார்த்தை ஒரு சமூகத்திற்கும் இடையிலான இடைவெளி என்பதை குறிக்கும் என்றும் தனிமனித இடைவெளி என்ற வார்த்தையே கொரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய இடைவெளியை குறிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார் 

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத் கோரிக்கையை அனைத்து எம்பிக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இனிஊடகங்களிலும் சமூக இடைவெளி என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் தனிமனித இடைவெளி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

From around the web