இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கையால் பரபரப்பு!

சுமார் 200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தாலும் உலகில் அமெரிக்கா இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது 

 

சுமார் 200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தாலும் உலகில் அமெரிக்கா இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது 

குறிப்பாக இந்தியாவில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பயணம் செய்யக் கூடாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் அமெரிக்க இணைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்கா தனது குடிமக்களுக்கு கூறிய போது இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் கொரோனா  தொற்று அதிகமாக இருக்கும் இந்தியாவில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்என்று அறிவித்துள்ளது 

மேலும் கொரோனா மற்றும் பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பயணம் செய்யக் கூடாத நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவையும் அமெரிக்கா இணைத்துள்ளதால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று அஞ்சப்படுகிறது

From around the web