வீடு வீடாக பணப்பட்டுவாடா! அதிமுகவினர் கைது!

வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா கொடுக்கும் அதிமுகவினரை கைது செய்தனர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக  சத்யபிரதா சாகு உள்ளார்.

lockup

மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை ஆங்காங்கே கொண்டு செல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத தங்க நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மத்தியில் ஆளும் கட்சியான அதிமுக வினர் வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா நிகழ்ந்ததாக தகவல்  வெளியானது.

மேலும் அந்த பணப்பட்டுவாடா செய்தவரை நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர். அதன்படி சென்னை ஆவடியில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 2 பேரை கைது செய்தனர். மேலும் பட்டியலுடன் அவர்கள் வீடு வீடாக சென்று பணம் கொடுத்ததாக அதிமுகவை சேர்ந்த சரஸ்வதி, அம்சவேணி கைது செய்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம்  மச்சுவாடியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவை சேர்ந்த பழனி ,சதாசிவம் இருவரை கைது செய்தனர். மேலும் தேனி மாவட்டம் போடி  11 வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவின் சித்தரஞ்சன் கைது செய்யப்பட்டதாக தகவல்  வெளியானது.

From around the web