விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் அவ்வப்போது தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்த நிலையில் நேற்று  அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்

இந்த நிலையில் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மாணவ செல்வங்களே விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றிபெற எண்ணிலடங்கா வழிகள் உள்ளன. மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்’ என்று முதல்வர் கூறியுள்ளார்.

ஏற்கனவே மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் எதையும் எதிர்க்கும் துணிச்சலுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் மாணவர் விக்னேஷ் மரணத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார் என்பதும் மாணவரின் குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார் என்பதும் அவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web