ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது – தொழிலாளர்கள்

சென்னை அருகே அண்ணனுரில் சார்பில் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து, தென்பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் ரயில்வே தொழிலாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் 20 ஆயிரம் ரயில்கள் இயங்கி வருகின்றன. இதில் 13,000 சரக்கு ரயில்களும், 7000 மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் உள்ளன. இதன் மூலமாக தினந்தோறும் 2 கோடியே 40 லட்சம் மக்கள் பயணித்து வருகின்றனர். இதனை 160 ஆண்டுகளாக ரயில்வே தொழிலாளர்கள்
 
ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது - தொழிலாளர்கள்

சென்னை அருகே அண்ணனுரில் சார்பில் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து, தென்பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் ரயில்வே தொழிலாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தியா முழுவதும் 20 ஆயிரம் ரயில்கள் இயங்கி வருகின்றன. இதில் 13,000 சரக்கு ரயில்களும், 7000 மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் உள்ளன. இதன் மூலமாக தினந்தோறும் 2 கோடியே 40 லட்சம் மக்கள் பயணித்து வருகின்றனர். இதனை 160 ஆண்டுகளாக ரயில்வே தொழிலாளர்கள் இயக்கி வருகின்றனர். 

ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது – தொழிலாளர்கள்


இந்நிலையில் ரயில்வேயில் புரடக்க்ஷன் பிரிவு, பராமரிப்பு பணிகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்திட கோரி தென்பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் லாபத்தில் இயங்க கூடிய ரயில்வே ஏன் தனியாரிடம் ஒப்படைக்கிறது. இதனை உடனடியாக ரத்து செய்யவில்லை எனில் தொழிலாளர்களை திரட்டி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக எச்சரித்தனர்.

From around the web