அமைச்சர்களின் தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா-திருநாவுக்கரசர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இன்றைய தினம் காலையில் துவங்கியது.அதற்கான வாக்கு பதிவானது அனைத்து தொகுதிகளிலும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் வாக்காளர்கள் தனது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.மேலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.வாக்காளர்களுக்கு முக கவசம், சனிடைசர், கையுறை போன்றவை வழங்கப்பட்ட பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் வாக்குப்பதிவினை தேர்தல் அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் காவல் படைகள்,காவல்துறையினர் மற்றும் பல பாதுகாப்பு அணியினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காலையிலிருந்து தமிழகத்தில் பல பிரபலங்கள் தங்களது வாக்கினை வாக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கிறது.
திருநாவுக்கரசர் கூறியுள்ளார், அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிக பணப் பட்டுவாடா நடைபெறுவதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.பணப்பட்டுவாடாவையும் தாண்டி யாரும் ஜெயிக்க வைப்பது என மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் காலையில் உலகநாயகன் கமலஹாசன் பணப்பட்டுவாடா குறித்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.