வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கவில்லை… தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இருப்பினும் பல மாதங்களாக வீழ்ச்சியினை நோக்கிச் செல்லும் பொருளாதாரத்தினை தலைதூக்கி நிறுத்த 5 வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சீரியல் படப்பிடிப்புகள் நடத்துதல், ஹோட்டல்களை இயக்குதல், அரசு அலுவலகங்கள் சில இயங்குதல், வழிபாட்டுத் தலங்கள் செயல்படுதல், பேருந்து செயல்படுதல் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து தென்னிந்தியாவினைப் பொறுத்தவரை கோடி கோடியாய்
 
வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கவில்லை… தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இருப்பினும் பல மாதங்களாக வீழ்ச்சியினை நோக்கிச் செல்லும் பொருளாதாரத்தினை தலைதூக்கி நிறுத்த 5 வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் சீரியல் படப்பிடிப்புகள் நடத்துதல், ஹோட்டல்களை இயக்குதல், அரசு அலுவலகங்கள் சில இயங்குதல், வழிபாட்டுத் தலங்கள் செயல்படுதல், பேருந்து செயல்படுதல் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கவில்லை… தமிழக அரசு அறிவிப்பு!!

அந்தவகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து தென்னிந்தியாவினைப் பொறுத்தவரை கோடி கோடியாய் வசூல் பெறும் திருப்பதி தேவஸ்தானக் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் போன்றவை திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுகுறித்த எதிர்பார்ப்பினை நோக்கி பொதுமக்கள் காத்திருந்த நிலையில் கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற 3 மாநிலங்களில் அதிகரித்த வண்ணமே உள்ளதால், வழிபாட்டுத் தளங்கள் குறித்து எதுவும் இப்போதைக்கு ஆலோசிக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனால் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டால் மக்கள் கூடுவதைத் தடுக்க முடியாது என்பதால் இம்முடிவினை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

From around the web