"நீட் தேர்வில் தயாராகும் மாணவர்கள் குழப்பாதீர்கள்"; பாஜக மாநில தலைவர் முருகன்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் தமிழகத்தில் பாஜகவின் மாநில தலைவராக உள்ள முருகன்!
 
murugan

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். அவர் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக காணப்பட்டது நீட் தேர்வு. மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறாது என்றும் அவர் உறுதி அளித்தார் மேலும் உடனடி தேர்வு தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். தமிழகத்தில் 20 ஆண்டுக்கு பின்னர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் பாஜகவினர்.murugan

அதன்படி தமிழகத்தில் 4 பாஜகவை சேர்ந்த எம் எல் ஏ க்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவராக உள்ளார் முருகன் .அவர் தாராபுரம்  தொகுதியில் போட்டியிட்டு கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.  அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக சார்பில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் பாஜக மாநில தலைவர் முருகன்.

மேலும் அவர் கூறினார், நவம்பர் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பதனை கூறினார். மேலும் அவர் திமுக அரசை பார்த்து சில வேண்டுகோள் வைத்துள்ளார். அதன்படி இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். திமுக அரசானது நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் குழப்பக் கூடாது என்று கூறியுள்ளார்.

From around the web