அரசியலுக்கு வர வேண்டாம்: ரஜினியிடம் கோரிக்கை வைக்கின்றதா திமுக?

 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவருக்கு நெருக்கமான மருத்துவர் ஒருவர் மூலமும் வெளிநாட்டு நண்பர் ஒருவர் மூலமும் திமுக கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக அரசியல் உலகில் ஒரு வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தற்போதைய சூழ்நிலையில் அதிமுக கிட்டத்தட்ட இரண்டு பிரிவுகளாக உள்ளது. எனவே திமுகவை எதிர்க்கும் வல்லமை அதற்கு இல்லை என்றே கூறப்படுகிறது. அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டால் கண்டிப்பாக திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடும் என்று சொல்கின்றனர் 

இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்ய திமுக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரஜினிக்கு நெருக்கமான மருத்துவர் ஒருவர் மூலமும் வெளிநாட்டு நண்பர் ஒருவர் மூலமும் அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கோரிக்கை விடப்படுவதாக கூறப்படுகிறது 

சென்டிமென்டாக அவருடைய உடல் நிலையையும் கொரோனாவால் ஏற்படும் ஆபத்தையும் அவருக்கு சுட்டிக்காட்டி வருவதாகவும் தெரிகிறது. ஆனால் ரஜினி தரப்பிலிருந்து சாதகமான எந்த பதிலும் வரவில்லை என்றும் அரசியலுக்கு வருவதில் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாகவும் பிப்ரவரியில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன

அதிமுகவை விட ரஜினிகாந்த் தான் நமக்கு முதல் போட்டியாளர் என்பதை தற்போது திமுக கொண்டதாகவே தெரிகிறது

From around the web