புதிய ரேஷன் கார்டு பயனாளர்களே பயப்படாதீர்கள் உங்களுக்கும் கிடைக்கும்!!!

புதிய அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு  நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தகவல்!
 
ration

தற்போது நாடெங்கும் கொரோனாவின் பேச்சு அதிகமாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி வைக்கப்படுகின்றன. நம் தமிழகத்திலும் இரண்டு வாரத்துக்கு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக. திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின்  முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ration

 அவர் தற்போது மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களையும் நீதிகளையும் வழங்கி வருகிறார். ஆனால் இதில் சில குழப்பங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. காரணம் என்னவெனில் ரேஷன் கடையில் வழங்கப்படும் 2000 ரூபாய் மற்றும் நிவாரண பொருட்கள் அனைத்தும் பழைய ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக, இதனால் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் நிவாரண பொருட்கள் இன்றி அவர்கள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் தற்போது நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க 42.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று நேற்று அரசு அறிவித்திருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

From around the web