நன்கொடையாக 486 ஆக்ஸிசன் செறிவூட்டிகள்! அதில் 336 கோயம்புத்தூருக்கு! மீதமுள்ள 150  3 மாவட்டங்களுக்கு!

தமிழகத்துக்கு கிடைத்த 486 ஆக்சிசன் செறிவூட்டிகள் நன்கொடையாக கிடைப்பதாக தகவல்!
 
oxygen

தற்போது நம் தமிழகத்திற்கு முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் முதன்முறையாக நம் தமிழகத்தில் ஆட்சியில் பொறுப்பேற்று உள்ளார் என்றும் கூறலாம். மேலும் அவர் தலைமையில் தற்போது ஆட்சியில் திறம்பட செயல்பட்டு வருவதாகவும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.  தமிழகத்தில் மூன்று வார காலத்திற்கு அவர் ஊரடங்கு அறிவித்து இருந்தார். தற்போது மூன்றாம் வார காலமும் நடைமுறையில் உள்ளன. முதல் இரண்டு வார காலத்தில் ஒரு சிலவற்றிற்கு அனுமதி அளித்திருந்த முதல்வர் மூன்றாம் வாரத்திற்கு எதற்குமே அனுமதி கிடையாது என்றும் முதல்வர் முக ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.stalin

அவர் தற்போது பல்வேறு மாவட்டங்களில் தேவையான சிகிச்சைக்கான பொருட்களை அவ்வப்போது அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது .மேலும் அவ்வப்போது நிவாரண தொகைகளையும் நிவாரண நிதி களையும் வழங்கி வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.  அவர் மத்திய அரசு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்கா இந்தியா நட்புறவு அமைப்பானது தமிழகத்திற்கு 486 ஆக்சிசன் செறிவூட்டிகள்  நன்கொடையாக வழங்கியது.

இதனை நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறம்பட பித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி இதில் உள்ள 150 ஆக்சிசன் செறிவூட்டிகள்  ஈரோடு திருப்பூர் சேலம் மாவட்டங்களுக்கு தலா 50-50 ஆக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள 336 ஆக்சிசன் செறிவூட்டிகள்  அனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர் பெரும்பாலும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிக முன்னுரிமை வழங்குவதாக கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் திமுகவை விட அதிமுகவே அதிக ஆதிக்கம் இருந்ததாகவும் காணப்பட்டது. இதனால் அந்தப் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இவ்வாறு செய்வதாகவும் வதந்திகள் பரவிகிறது.

From around the web