பேசினாலே கொரோனா பரவுமா? மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்!

 
spread

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவும் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா பாதிப்பு குறித்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலோ இருமினாலோ அல்லது பேசினாலோ அவரது எச்சில் காற்றில் கலப்பதன் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு வரவும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது

எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் துகள்கள் வெளியே வந்தால் அது காற்றில் கலந்து சுமார் 2 மீட்டர் தொலைவு வரை சென்று கொரோனாவை அடுத்தவர்களுக்கு பரப்பும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில எச்சில் துகள்கள் காற்றில் கலந்தால் 10 மீட்டர் வரை செல்லும் என்றும் புதிய வழிகாட்டு மழையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்போது பேசாமல் இருப்பதும், மாஸ்க் அணிந்து கொள்ளவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
 

From around the web