விமானத்தில் விரைந்து டெல்லிக்கு வந்த மருத்துவர்கள்!உதவும் விமானப்படை!

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் விரைந்தனர்!
 
விமானத்தில் விரைந்து டெல்லிக்கு வந்த மருத்துவர்கள்!உதவும் விமானப்படை!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி மாநகரம்.டெல்லி மாநகரில் உச்சநீதிமன்றம் உள்ளது. மேலும் தற்போது டெல்லியில் முதல்வராக உள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். அவர் அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளித்திருந்தார்.மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதன் பின்னர் அவர் டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தி இருந்தார். அவர் அதன் பின்னர் டெல்லியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளார்.doctor

ஆயினும் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தேவைப்படும் ஆக்சிஜனின் பற்றாக்குறையும் டெல்லியில் அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  டெல்லியில் உதவும் வண்ணமாக பிற மாநிலங்களில் இருந்து அவசரமாக மருத்துவர்கள் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் விரைந்தனர். மேலும் அவர்கள் கொச்சி விசாகப்பட்டினம் பெங்களூரு மும்பையில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் வருவதாக கூறப்படுகிறது. விமானப்படை மூலம் டெல்லி மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

From around the web