எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் படித்த டாக்டர், எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே மரணம்: கொரோனாவா?

 

25 வயது டாக்டர் ஒருவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் மருத்துவ படிப்பு படித்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் என்ற இளம் டாக்டர், கடந்த 2018 ஆம் ஆண்டு தான் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். அதன் பின் அவர் தனது சொந்த ஊரில் டாக்டராக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென கடந்த மாதம் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டது 

இதனையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததை அடுத்து அவர் படித்த எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்

எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பேராசிரியர்களும் அவருடைய சீனியர் மாணவர்களாக படித்தவர்களும் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்த ஒரு டாக்டர், அதே மருத்துவமனையில் கொரோனாவால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web