கொரோனா நோயாளியின் காதலை ஏற்றுக்கொண்ட டாக்டர்!

சீனாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கித் தவிக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் தொடர்ந்து அயராமல் தங்களது வேலைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றனர். மேலும் இந்தக் கொரோனாவுக்கு எதிரான காலகட்டத்தில் பல வித்தியாசமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றனர். ஆமாங்க அந்த வகையில் கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் நோயாளிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது எகிப்தில் ஆயிஷா மொசபா என்ற பெண் மருத்துவருக்கும், அந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை
 
கொரோனா நோயாளியின் காதலை ஏற்றுக்கொண்ட டாக்டர்!

சீனாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கித் தவிக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் தொடர்ந்து அயராமல் தங்களது வேலைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றனர்.


மேலும் இந்தக் கொரோனாவுக்கு எதிரான காலகட்டத்தில் பல வித்தியாசமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றனர். ஆமாங்க அந்த வகையில் கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் நோயாளிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனா நோயாளியின் காதலை ஏற்றுக்கொண்ட டாக்டர்!

அதாவது எகிப்தில் ஆயிஷா மொசபா என்ற பெண் மருத்துவருக்கும், அந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த நோயாளிக்கும் சிகிச்சை காலத்தில் துவக்கத்தில் நட்பு ஏற்பட்டுள்ளது.

கடைசியில் இந்த நட்பு இரண்டு மாதங்களில் காதலாக மாறியுள்ளது. இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த முகமது பாமி நேற்று முன் தினம் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அப்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் ஆகையில், மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார். இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ஆயிஷா காதலை ஏற்றுக்கொண்டார். இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

From around the web