வாரத்தில் இனி 4 மட்டும் தான் வேலையா? 3 நாட்கள் விடுமுறையா?

 

கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த போது தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரம் ஆக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் தொழிலாளர்களின் ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக வாரத்திற்கு 48 மணி நேர பணி நேரம் என்பதில் எந்த மாற்றம் இல்லை. ஆனால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்பதற்கு பதிலாக இனி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை நேரம் என்ற வகையில் நான்கு நாட்கள் வேலை செய்தால் போதும் என்றும், மீதி உள்ள மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், புதிய விதிகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

working hours

இந்த புதிய விதி சுயவிருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் ஊழியர்கள் இணைந்து முடிவு செய்து கொள்ளலாம். வார வேலை நாட்கள் மாறுதலை பின்பற்ற நிறுவனம் அரசின் ஒப்புதலைப் பெற தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் எந்த ஒரு ஊழியரும் தொடர்ந்து ஐந்து மணி நேரம் பணியாற்றக் கூடாது என்றும் அரை மணி நேர இடைவெளி கட்டாயம் வேண்டுமென்றும் ஊழியர்களுக்கு மாநில காப்பீட்டு கழகம் மூலம் இலவச மருத்துவ பரிசோதனை வழங்கப்படும் என்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இணைய முகப்பு தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்

From around the web