தோனி வருகையை எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி என்ன தெரியுமா?

கடலூரைச் சேர்ந்த தோனியின் ரசிகர் ஒருவர் தனது வீட்டையே சிஎஸ்கே நிறமான மஞ்சள் நிறமாக மாற்றினார் என்ற செய்தியை புகைப்படங்களுடன் ஏற்கனவே பார்த்தோம்
லட்சக்கணக்கில் செலவு செய்து தனது வீட்டையே மஞ்சள் நிறமாக மாற்றி தோனியின் புகைப்படங்களையும் வீட்டின் முன் வரைந்திருந்த அந்த ரசிகர் கடலூர் மாவட்டம் அரங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அந்த ரசிகர் பேட்டியில் கூறும்போது தனது வீட்டை தோனி அவர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை விரைவில் தோனி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தோனியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அந்த சிஎஸ்கே ரசிகருக்கு தற்போது இன்ப அதிர்ச்சியாக உதயநிதியின் வருகை கிடைத்துள்ளது. ஆம் தனது வீட்டையே சிஎஸ்கே தீம் ஆக மாற்றிய தோனியின் ரசிகர் கோபியின் வீட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்றுள்ளார். அவர் அந்த வீட்டின் முன்னே உட்கார்ந்து சிஎஸ்கே ரசிகர் கோபி உடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது