தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறார்களா?

தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கின்றனர் என கண்காணிக்க வேண்டும்!
 
தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறார்களா?

தமிழகத்தில் கலைஞர் கட்சி என்றாலே அனைவரும் கூறுவது திராவிட முன்னேற்ற கழகம் தான். அத்தனை பேர் பெற்ற கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. இந்நிலையில் தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக கலைஞரின் மகன் என்று அழைக்கப்படுகின்ற மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் அவரே சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார் என்பதும் குறிப்பிடதக்கது.இந்நிலையில் அவர் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து திமுக கட்சியில் உள்ள எம்பிக்கள் பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.kanimozhi

அதிலும் குறிப்பாக திமுக எம்பி ஆன கனிமொழியும் தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அவருக்கு ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டது. அதனால் அவர் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்களை ரத்து செய்தார். மேலும் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். தேர்தலின்போது முழு கவச உடைகளை அணிந்து வாக்கு பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடதக்கது .

சில தினங்கள் முன்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி கலந்து கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் செய்தியாளரிடம் சில செய்திகளை கூறுகிறார். அதன்படி தமிழகத்தில் கொரோனா  தடுப்புமருந்து பற்றாக்குறைக்கு காரணம் என்ன ?என்றும் அதன் பின்னணி என்ன? என்றும் தமிழக அரசு கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கின்றன என கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

From around the web