ஊரடங்கு அறிவித்ததோடு கடமை முடிந்தது என நினைக்கக்கூடாது! எதிர்க்கட்சித் தலைவர்!

ஊரடங்கு அறிவித்ததோடு கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்க கூடாது என்று கூறுகிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்!
 
ஊரடங்கு அறிவித்ததோடு கடமை முடிந்தது என நினைக்கக்கூடாது! எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவித்திருந்த தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகமாக வேட்பாளர்கள் வேட்புமனு  தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் புதிதுபுதிதாக கூட்டணி கட்சிகள் களமிறங்கியுள்ளன. தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தனது கூட்டணியாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. மேலும் மதிமுக  கட்சி கூட்டணி வைத்து சட்ட மன்ற தேர்தலை சந்தித்துள்ளது.

stalin

மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவர் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் சட்ட மன்றத்தேர்தல் நடைபெற்றது. தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார். அதன்படி பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் மக்களுக்கு உதவ வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஊரடங்கு அறிவித்ததோடு தங்களது கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கக் கூடாது எனவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கொரோனா  குறித்த அச்சத்தை அரசுகள்தான் முன்வந்து போக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் படுக்கை வசதி, தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web