உயிரோடு விளையாட வேண்டாம்! முதல்வர் அவர்களே உண்மை வேண்டும்: முக ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறையினர்களால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா மரணங்கள் அரசின் கணக்கில் சேர்க்கப்படாத தகவல் ஆர்டிஐ வாயிலாக தெரியவந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை சற்றுமுன் பார்த்தோம். 

அதாவது நெல்லையில் இதுவரை கொரோனா வைரஸால் 182 பேர் பலியாகியிருப்பதாக அரசு அறிக்கையில் தகவல் உள்ள நிலையில் ஆர்.டி.ஐ தகவலின்படி நெல்லை மாவட்டத்தில் 285 பேர் பலி என தெரிய வந்துள்ளது. எனவே இதன் மூலம் 103 கொரோனா மரணங்கள் கணக்கில் சேர்க்கவில்லையா? என்ற கேள்வி எழுந்து ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: COVID19-ல் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் #RTI தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள்: 103! சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்! உயிரோடு விளையாட வேண்டாம்!  முதல்வரே  உண்மை வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web