இனி ரஷ்யாவிடம் கையேந்த வேண்டாம்! நாமே தயாரிப்போம்!!இதனால் பிரச்சனை வருமா?

இந்தியாவில் மூன்று கட்டமாக 85 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது!
 
russia

தற்போது நம் இந்தியாவில் மட்டும் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் தற்போது பல நாடுகளில் இந்த கொரோனாவின் பாதிப்பானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் எதிர்பாராதவிதமாக உலக நாடுகளை எதிர் விதமாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஆசியாவிலேயே இந்திய நாட்டில் தான் கொரோனா பாதிப்பு முதலிடத்தில் உள்ளதாகவும் அதுவும் குறிப்பாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதாகவும் முதல் இடத்தில் உள்ளதாகவும் புள்ளி விபரங்கள் வெளியானது.sputnik v

இந்நிலையில் இதற்கு தடுக்கும் விதமாக இந்தியாவில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகளை பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. மேலும் உற்பத்தியையும் அதிகரித்துள்ளன. ஆயினும் பல பகுதிகளில் தடுப்பூசிகளை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவானது ரஷ்யாவிடம் உதவி கோரியது. ரஷ்யாவும் இந்தியாவுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொடுத்தது.

இந்நிலையில் இந்தியாவானது சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் இன்னும் ஓரிரு மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட இந்தத் தடுப்பூசி ஆனது இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக போகிறது. மூன்று கட்டங்களாக இந்த தடுப்பூசி உற்பத்தி செய்யலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இதனால் தமிழ் இந்தியாவில் 85 கோடி தடுப்பூசிகள் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web