தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா 

 

தன்னைப் பற்றிய விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மூன்றாவது நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆவார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்கள் வெளியானது 

இந்த நிலையில் தன்னைப் பற்றிய விவரங்கள் மூன்றாவது நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். தன்னுடைய சிறைவாசம் மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபர் ஒருவர் ஏற்கனவே பெற்றிருந்த நிலையில் இது குறித்து சசிகலா மூன்றாவது நபருக்கு தன்னை பற்றிய விவரங்களை தெரிவிக்க கூடாது என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்

சசிகலாவின் இந்த கடிதத்திற்கு கர்நாடக சிறை நிர்வாகம் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web