பாஜக வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டாம்: தா பாண்டியன் கருத்து 

 
பாஜக வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டாம்: தா பாண்டியன் கருத்து

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் விரைவில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்ட பலர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய அவசியமில்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த வேல் யாத்திரை போகும் இடமெல்லாம் வரவேற்பை பெறாது என்றும் அதனால் பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வரவேற்பு இல்லாமல் பாஜகவினர் அவமானத்தை சந்திக்கும் என்றும் அதற்காக இந்த யாத்திரையை தடை செய்ய யாரும் கோரிக்கை விட வேண்டாம் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆனால் கடந்த சில மாதங்களாக பாஜகவிற்கு தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவதைப் பார்க்கும்போது இந்த வேல் யாத்திரையை பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுவதாக எல். முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web