கைது செய்தாலும் திமுகவின் பரப்புரைப் பயணம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் 

 
கைது செய்தாலும் திமுகவின் பரப்புரைப் பயணம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.அதன்படி இன்று காலை திருவாரூர் வந்த உதயநிதி ஸ்டாலின் மாலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் 

ஆனால் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய சில நிமிடங்களில் திருவாரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி பெறாமல் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்வதாக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

udhayanidhi arrest1

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் திமுகவினர் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்த நிலையில் கைது செய்தாலும் திமுகவின் பரப்புரை பயணம் தொடரும் என்று திமுகவின் பரப்புரையை தடுக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web